பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியிலுள்ள இரு உணவுகையாளும் நிலையங்கள் சுகாதார சீர்கேட்டுகளுடன் இயங்கியமையால் நீதிமன்ற உத்தரவுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் சீல்வைக்கப்பட்டன.

 

பூநகரி மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையில் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய திடீர் பரிசோதனையின் போது சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்ட நான்கு உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதீவான் நீதிமன்றத்தில் முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் தர்மிகனினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

 

இதன்போது குற்றங்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மொத்தமாக நான்கு வியாபார நிலையங்களுக்கும் எழுபத்தையாயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதோடு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய இரண்டு உணவு கையாளும் நிலையங்கள் சீர்செய்யப்படும் வரை தற்காலிகமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் செய்யப்பட்டன.

 

இந்த உணவுகையாளும் நிலையங்கள் குளிரூட்டியில் சமைக்காத இறைச்சியின் இரத்தத்தால் சமைத்த பெருமளவான றொட்டிகள் மாசடையக்கூடிய வகையிலும், கழிவு நீரை நிலமேற்பரப்பில் தொடர்ச்சியாக செலுத்தியும், சமையலறையில் சமைத்த உணவு மாசடையக்கூடியவாறு அடிப்படை சுகாதார வசதிகள் இன்றியும், உணவு கையாளும் உடல் தகுதிக்கான மருத்துவ சான்று இன்றி ஊழியர்கள் உணவைக் கையாளுதல் உட்பட கடும் சீர்கேடுகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin