பாடசாலை மாணவர் அனுமதிக்கு புதிய சுற்றுநிருபம்

பாடசாலை மாணவர் அனுமதிக்கு புதிய சுற்றுநிருபம்

​பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 5 மற்றும் 6 ஆம் வகுப்புகள் தவிர்ந்த, 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேலும், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புக்களில் உள்ள வெற்றிடங்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

​புதிய சுற்றறிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, மேலதிக ஆவணங்களுடன் இந்த மாதத்தின் 26 ஆம் திகதிக்கு முன்னர் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin