சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு..!
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய “சிறுவர் தடுப்பு இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகத்தர்களின் வகிபங்கு மற்றும் Custody, Adoption வழக்கு விடயங்களில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களின் கடப்பாடுகள் தொடர்பாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று(11)சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளராக கல்முனை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான எம்.என்.எம் அஸாம்,எம்.எம் எப் சாமீலா,வி.டி ஹசீனா ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர்களின் நடத்தை மற்றும்,பெண்களின் பாதுகாப்பு சம்மாந்தமாக தெளிவுபடுத்தினர்கள்.
மேலும் இந் நிகழ்வில் சிறுவர்கள்,பெண்கள் நலன் சார் உத்தியோகத்தர்கள் கிராம சேவவர்கள் மற்றும் துறைசார் வெளிகள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


