எல்லே பஸ் விபத்து உயிரழப்பு 16 ஆக அதிகரித்தது..!

எல்லே பஸ் விபத்து உயிரழப்பு 16 ஆக அதிகரித்தது..!

பஸ்ஸில் பயணித்தவர்கள் 15 பேரும் ; பஸ்ஸூடன் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்பதற்காக பள்ளத்தில் கையிறுடன் இறங்கிய ஒருவர் கையிறு அறுந்து பள்ளத்தில் விழுந்து அவரும் உயிரழந்துள்ளார் மொத்தமாக இதுவரை 16ஆக உயிரழப்பு அதிகரித்துள்ளது!

மேலும் 15 பேர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதோடு தேடிதல் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது!

 

எல்ல – வெல்லவாய வீதியில் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேரூந்து 20 பேருக்கு மேல் காயம்.!!

 

எல்ல – வெல்லவாய வீதியில் கோர விபத்து எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தை சந்தித்துள்ளது.

 

சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Recommended For You

About the Author: admin