கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு!
யாழ்.கொடிகாமம் – ஏ 9 வீதி இராமாவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் – இராமாவில் பகுதியில் இன்று(03) முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காங்கேசந்துரையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலுடன் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
தண்டவாளத்தை நடந்து கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சங்கீதா உசாநந்தன் என்பவரே உயிரிழந்தவராவார்.
பளையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.


