தென்மராட்சி பிரதேச செயலராக திரு. சத்தியசோதி கடமைகளை பொறுப்பேற்றார்..!
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக திரு.சத்தியசோதி அவர்கள் 01/09 திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் தென்மராட்சிப் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி உஷா சுபலிங்கம் இடமாற்றம் கிடைக்கப்பெற்று செல்லும் நிலையில் இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


