இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக தமிழ் பெண்..!

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டது முதல் 2003.12.01 முதல் 2006.05.31 வரை திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் உதவிப் பிரதேச செயலாளராகவும்,
2006.06.01 முதல் 2015.03.17 வரை பிரதேச செயலாளராகவும்,

2015.03.18 முதல் 2018.04.04 வரை பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச பிரதேச செயலாளராகவும்,
2018.04.05 முதல் 2019.12.01 வரை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இளைஞர் விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினது சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும்,
2021.10.01 முதல் 2024.03.17 வரை கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும்,

2024.03.18 முதல் 2025.08.22 வரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதி செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: admin