மட்டக்களப்பு கல்லடியில் விபத்து..!
ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த கார் மட்டு கல்லடியில் விபத்துக்குள்ளானது
இன்று அதிகாலை மட்டு கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று கல்லடி பிரதேசத்தால் பயணிக்கும் போது கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்னால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த ஆலயக்கிணற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்துச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பு விமான நிலையம் சென்று மீண்டும் ஆரையம்பதி நோக்கி பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கும் போது. அவர்கள் பயணம் செய்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி முருகன் ஆலய கிணற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த சமயம் காரில் 6 பேர் பயணித்ததுடன் அதில் 7 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளடங்குகிறது.
காயமடைந்தவர்கள் வீதியால் பயணித்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் 7 மாத கைக்குழந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது


