பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்..!
பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்
யாழ். சரஸ்வதி மண்டபத்தில் இன்று (23.08.2025) இடம்பெற்றது.
பனை அபிவிருத்தி சபைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, அமைச்சர் சந்திரசேகர் பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கி வைத்ததோடு, கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.


