தவறான நிதி பயன்பாட்டிற்கான பிணை அல்லது விளக்கமறியல்: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிணை வழங்குவதா அல்லது விளக்கமறியலில் வைப்பதா என்பது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 செப்டெம்பரில் ஜனாதிபதியாக இருந்தபோது தனிப்பட்ட லண்டன் பயணத்திற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், நீதிமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாளர் திலீப பீரிஸ் ஆஜராகிய அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுஜ பிரேமரத்ன ஆஜராகினார்.
இந்த வழக்கில் பிணை வழங்குவதா அல்லது விளக்கமறியலில் வைப்பதா என்பது குறித்த இறுதித் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.
ரணில் விக்கிரமசிங்க 2022 முதல் 2024 வரை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். இவருக்குப் பின், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 2024 செப்டம்பர் 23 அன்று பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

