தொடரும் தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: தபால் பொதிகள் விநியோகத்தில் இராணுவம் உதவி!
தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, இன்று அஞ்சல் பொதிகள் விநியோகத்திற்கு இலங்கை இராணுவம் உதவியது.
19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
வேலைநிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கியிருந்த பெருமளவிலான தபால் பொதிகளை பொலிஸாரின் உதவியுடன் இலங்கை இராணுவம் விநியோகித்தது.
மத்திய தபால் பரிவர்த்தனை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அஞ்சல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, பொதிகளை விநியோகிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

