வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் நிறைவினை முன்னிட்டு அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் நேற்றைய தினம் (21) இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் குறித்து வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக வெளியீடு ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin