பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல..!
அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பங்குதாரர்களுடன் நடாத்தப்படவுள்ள பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்றதுடன் குறித்த கலந்துரையாடலை மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் அவர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த், UNFPA யின் பால் நிலை சமத்துவம் தொடர்பான திட்ட நிபுணர் உதயணி தேவபெருமாள், UNFPA யின் நிபுணர் திருமதி.கிரோசி, யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் திட்ட முகாமையாளர் பீ.சாமுவேல், மாவட்ட செயலக மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாலினி சந்திரசேகரம் உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் துறைசார் திணைக்கள அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்ததுடன், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த விடையம் தொடர்பாக பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை எவ்வாறு அனுகலாம் என்பது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,


