மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம்..!
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம் (22) திகதி மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், கணக்காளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதில் குறிப்பாக வீதி மின் விளக்குகள் பொருத்துவதை தொடர்பில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உறுப்பினர்கள் இடையே ஏற்பட்டது. அதாவது சில உறுப்பினர்கள் மின் விளக்குகள் தங்களது வட்டாரங்களில் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சரியான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது இதன் போது வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டு எதிர்வரும் காலங்களில் அனைத்து உறுப்பினர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கான சேவைகளை வழங்க வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.


