பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி!

பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி!

பண்டாரகம, தும்போதிய பாலம் அருகே காரில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில், T-56 ரக துப்பாக்கியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்து உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும் தாக்குதலுக்கான நோக்கத்தைக் கண்டறிவதற்கும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin