சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பிய கடிதத்தில், ஆரம்பக் கல்வியில் ‘சட்டம்’ அல்லது அதுபோன்ற ஒரு பாடத்தை கட்டாயப் பகுதியாகவும், உயர்தரத்தில் ஒரு விருப்பத் தெரிவுப் பாடமாகவும் சேர்ப்பதற்கான தேவை மற்றும் நியாயம் இருப்பதாக BASL தெரிவித்துள்ளது.
சிவில் விழிப்புணர்வு மற்றும் ஜனநாயக ஈடுபாட்டிற்கான முக்கிய அடிப்படையாக சட்டக் கல்வியை அங்கீகரித்து பல நாடுகள் ஏற்கனவே தமது பாடசாலைகளில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளன என்று BASL சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தை வடிவமைப்பதிலும் மீளாய்வு செய்வதிலும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.

