பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா..!
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசாரப் பேரவை இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா நாளை(15.08.2025) வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளர்.
மேலும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கிளிநொச்சி மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கி.மாலினி மற்றும் பளை தொழிலதிபர் ந.காந்தரூபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், பளை ஒப்பனைக் கலைஞர் கலாபூஷணம் செ.தனபாலசிங்கம் அதிதிக் கலை விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் சிவ நடனம், கிராமிய நடனம் நாடகம், இசை இன்பம், சாஸ்திரிய நடன சங்கமம், வாத்திய இசைச் சங்கமம், கலைத்தென்றல் விருது வழங்கல் மற்றும் இளம் கலைஞர் விருது வழங்கல் இடம்பெறவுள்ளன.


