செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..!

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..!

முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று காலை 7 மணியளவில் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி 14.08.2025 இன்று அதே நேரமளவில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

வள்ளிபுனம் பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin