சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல்..!

சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல்..!

சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.08.2025) காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அரசகரும மொழிகள் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. நந்தன கெட்டியாராய்ச்சி, ஆணையாளர்திரு எம்.எஸ்.ஜெயவீர மற்றும் கண்காணிப்பாளர் திரு. லசித் நலந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சமய தலைவர்களின் (இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்) சிங்கள மொழிப் புலமையை விருத்தி செய்து அதன் ஊடாக நல்லிணக்கத்தை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந் நிகழ்வு நடைபெற்றது.

இவ் கலந்துரையாடலில் வளவாளர்களாக திரு.ஸ்ரீ ரஞ்சன், திரு.சுனில் ஆகியோா் கலந்து கொண்டனர்

இவ் கலந்துரையாடலில் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி மாதவி குணரட்ண அரச கருமமொழியின் உத்தியோகத்தர்கள், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர், சமய தலைவர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin