அறுகுவெளி பகுதியில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியல் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரியவின் நேரடி வழிகாட்டலில், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகாவின் ஆலோசனைக்கு அமைய, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சானக டீசில்வாவின் கண்காணிப்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த செனவிரத்னவின் கீழ் இயங்கும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட விஷேட தேடுதலின் போது அறுகுவெளி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரிடன் மேற்கொண்ட சோதனையின் போது உடைமையில் இருந்து கேரள கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட மேலதிக விசாணையில் அறுகுவெளி பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 284 கிலோ 415 கிராம் நிறையுடைய 7 கோடி ரூபாய்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனவும், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் சமூக செயற்பாட்டில் ஈடுபவதாகவும் தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin