பதின்ம வயது கர்ப்பம்: முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம்; விழிப்புணர்வு அவசியம்!

நாட்டின் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில், 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தனர்.

இந்த நிலை குறித்து உடனடி கவனம் செலுத்துவது அவசியம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin