அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான களவிஜயம்..!

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான களவிஜயம்..!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலி அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க இன்று 2025.08.10ஆந் திகதி ஏ எஸ் எம் உவைஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 08ம் பிரிவின் நிலமைகளை ஆராய்ந்தார்.

 

இப்பிரிவிலுள்ள மையவாடி, மீனவர் வாடிகள் அமைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்.

 

இக்கிராமத்தில் மிக அவசரமாக புனரமைப்புச் செய்ய வேண்டிய வீதிகளை பிரதேச உறுப்பினர் அஸ்வர் சாலி , கே எ ஹமீட் ஆகியோர் இணைந்து அடையாளப்படுத்தினர்.

 

கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து மையவாடிக்கு செல்லும் பிரதான வீதி, RDS வீதி, முஃ்மின் பள்ளிவாசல் வீதி, கடற்கரை வீதி, ஆராச்சியார் கிழக்கு வீதி உட்பட பல வீதிகளை அடையாளப்படுத்தினர்.

 

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவில் அதிகமான வீதிகள் மிகமோசமாக கிடப்பதனை அவதானித்த தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்கள் வட்டார உறுப்பினர் கெளரவ அஸ்வர் சாலியிடம் இவற்றை நிவர்த்தி செய்து தருவதாக கூறியிருந்தார். அத்துடன் மீனவர்களின் கோரிக்கைகளை செவிசாய்த்த அவர் அதற்கான உடனடித் தீர்வினையும் வழங்கிவைத்தார்.

 

இந்த கள விஜயத்தில் பிரதேச சபை உறுப்பினர் பாயிஸ் (உதவிக் கல்விப் பணிப்பாளர் – முன்பள்ளி) உட்பட தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் றிஷாத் எ காதர் பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்திருந்தனர்.

Recommended For You

About the Author: admin