யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிரிழந்தவர் யார், உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து இதுவரை தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸாரும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin