நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நகைகளைக் களவாடுவதற்காக இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதனால் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்கள்:
ஆலயச் சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், பக்தர்கள் தங்க நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அணிந்துள்ள நகைகளில் அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
ஆலயச் சூழல்களில் பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஆலயச் சூழலில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளையும், நகைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

