யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களான
வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (31.07.2025) மு. ப 11.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டு, உரிய காலத்தில் வினைத்திறனாக நிறைவேற்றி முடிக்க அரசாங்க அதிபரால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களள், மாவட்ட , பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


