ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு: ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் லாவா வெளியேற்றம்!
தலைநகர் ரெய்க்யவிக் அருகே அமைந்துள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை அமைப்புகள் 2021 இல் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து, ஐஸ்லாந்தில் சுமார் 12 எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஐஸ்லாந்தின் வானிலை அலுவலகத்தின்படி, பூமியின் மேலோட்டை உடைத்து வெளியேறிய மாக்மா, சுமார் 0.7 முதல் 1 கி.மீ (0.4 முதல் 0.6 மைல்) நீளமுள்ள ஒரு பெரிய பிளவை உருவாக்கியுள்ளது.
இந்த பிராந்தியத்தில் எரிமலை வெடிப்புகள் பல தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகளாக கூட தொடரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

