அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று (16.07.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் பாசித், கே.கோடிஸ்வன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin