இலங்கைக்கு கருணை காட்டிய டிரம்ப் ! 44 வீதத்திலிருந்து 30 வீதம் ! இலங்கை ஜனாதிபதியின் பெயரை மாற்றிய அமெ.ஜனாதிபதி !

Trump’s reciprocal tariff on #SriLanka

ஏப்ரல் மாதம் 44 வீத வரி விதிக்கப்பட்ட பிறகு நேற்று (ஜுலை 9) கருணை காட்டப்பட்ட 14 நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் சேர்த்து 30 வீதமாகக் குறைத்திருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

14 வீதம் குறைந்திருக்கிறது என்று ஆறுதல் படுவதா அல்லது 33 வீதம் என்பது இலங்கை பொருளாதாரத்துக்கு விழுந்த மற்றொரு அடி என ஆதங்கப்படுவதா ?

April 2 “Liberation Day” என்று டிரம்ப் முதல் அறிவிப்பை வெளியிட்டவுடனேயே இலங்கை பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு குழுவொன்றை அனுப்பியது.

சென்றவர்களும் பெரியளவில் பொருளாதார விடயங்களில் தேர்ந்தவர்கள் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன; அவர்கள் அமெரிக்காவில் சந்தித்தவர்களும் டிரம்ப் அரசாங்கத்தின் முடிவை மாற்றக்கூடிய செல்வாக்கானவர்கள் இல்லை என்றும் உறுதியானது.

இத்தனை நாள் கோட்டை விட்ட பிறகு இப்போது இந்த 33% ஐ மாற்ற அடுத்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறதாம் இலங்கை அரசாங்கம்.

டிரம்ப் உறுதியாகச் சொல்கிறார் ஓகஸ்ட் 1இலிருந்து இது ஆரம்பிக்கிறது என்று.

முழு நாட்டுக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தில் விழுந்த அடி !

Recommended For You

About the Author: admin