திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..!

திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் பாடசாலை வளாகத்தில் இருந்த நாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு மேற்படி சிலை உடைக்கப்பட்டிருப்பதாக பாடசாலை சமூகத்தினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதே சிலை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Recommended For You

About the Author: admin