மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06.07.2025 ) மாலை சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும் ஒரு சிறுவனுமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

