இனியபாரதி கைது: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மீது தீவிர விசாரணைகள்!

இனியபாரதி கைது: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மீது தீவிர விசாரணைகள்!

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்ட கே. புஷ்பகுமார் எனும் இனியபாரதி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேசத்திலுள்ள முனியக்காடு பகுதியில் வைத்து இனியபாரதியை புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்துக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இனியபாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், இளைஞர், யுவதிகளைக் கடத்தி காணாமல் ஆக்கியமைஉள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த கைதுக்கான காரணமாக அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை தொடர்பாகவும் இனியபாரதி மீது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்தக் கைது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இனியபாரதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin