தென் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை: 457 பேர் கைது!
காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது மொத்தம் 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரவு 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

