eRL 2.0 கட்டமைப்பு செயலிழப்பு: ஜூலை 9 வரை சேவைகள் தடைபடும்!
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலத்திரனியல் வருமான அனுமதிப்பத்திர (eRL 2.0) கட்டமைப்பு, ஒரு முக்கிய தொழில்நுட்ப உட்கட்டமைப்புப் பிரச்சினை காரணமாக தற்போது செயலிழந்துள்ளது.
ICTA இன் தகவலின்படி, இந்தத் தடை ஜூலை 3, 2025 அன்று தொடங்கியது, இதன் காரணமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகளைப் பெற முடியவில்லை. இந்தச் செயலிழப்பு ஜூலை 9, 2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ICTA வருத்தம் தெரிவித்துள்ளதுடன், பிரச்சினையைத் தீர்க்க தொழில்நுட்பக் குழுக்கள் அவசரமாகச் செயல்பட்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளது.
பணிகள் முன்னேறும் போது மேலதிக தகவல்கள் பகிரப்படும் என்றும், சேவைகள் மீட்டெடுக்கப்பட்டதும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

