மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம்: 4 நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதி
கல்வி அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கும் திட்டம், நான்கு வர்த்தக நிறுவனங்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு, SLS 1732:2022 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளன என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சானிட்டரி நாப்கின் பொதிகளை விநியோகிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வேறு எந்த அமைப்பும் சானிட்டரி நாப்கின்களை வழங்க அனுமதிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

