216 சாராயப்போத்தல்களுடன் கைதடி பகுதியில் ஒருவர் கைது..!
சட்டவிரோதமான முறையில் அரச மதுபானத்தினை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் 03.07.2025 கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய கைதடி குமரநகர் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 216 கால்போத்தல் சாராயத்துடன் 46 வயதான ஒருவரை கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

