மட்டக்களப்பு ஆலயத்தில் பாம்பு புற்றுக்கு பால் வாத்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு..!
மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (02-07-2025)ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் ஆனி உத்தர நாளான இன்றைய தினம் (02-07-2025)அதிகாலை வேளை விஷேட பூசை இடம்பெற்ற நிலையில் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்ற போது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.

