அமெரிக்காவில் டொலர் மழை. முண்டியடித்து அள்ளிய மக்கள்

அமெரிக்காவில் டொலர் மழை. முண்டியடித்து அள்ளிய மக்கள்

நபரொருவரின் கடைசி ஆசையாக பல ஆயிரம் டொலர்கள் ஹெலிகொப்டரில் இருந்து கொட்டப்பட்டது!

அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று பணத்தைப் பொழிந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது, சமீபத்தில் காலமான உள்ளூர் கார் கழுவும் (car wash) உரிமையாளரான தோமஸ் எம்பவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நடைப்பெற்றதாக கூறப்படுகிறது, 5000 டொலர்கள் என ஒரு தகவலும் 50000 டொலர்கள் வரை கொட்டப்பட்டதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.

 

காலமாகிய தோமஸ் என்பவர் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பிறகு திரும்ப அவர்களுக்கே செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin