அரசாங்கம் உறுதியளித்தபடி வர்த்தமானியை மீளப்பெறவில்லை; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது !
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தொடுத்த அடிப்படை உரிமை வழக்கின் தீர்ப்பு இது !!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள 5941 ஏக்கர் தனியார் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்குத் தடை விதித்து, இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை (ஜூன் 28) காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு காணி உரிமையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

