தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் ஐ.நா சபையின் ஆணையாளருக்கு வழங்கியிருந்தோம். இதே நேரம் குறித்த விடையம் குறித்தும் ஏற்கனவே இலங்கை அரசுக்கும் வலியுறுத்தியிருந்தோம்.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்த ஐ.நா ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் காணப்படும் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சினைகள் மற்றும் சாட்சியங்களை நேரில் பார்வையிட்டிருந்ததுடன் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் பெற்றிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எமது அமைப்பினரால் கைதிகளின் விடுதலைக்கான வலுயுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin