மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர்கள் மடக்கிபிடிப்பு..!
அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்களை 24/06 செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸார் தனங்கிளப்புப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
தரை மணல் ஏற்ற வழங்கிய அனுமதிப் பத்திரத்தில் மாற்றம் செய்து ஆற்று மணல் ஏற்றி வந்த நிலையிலேயே பொலிஸார் மூன்று டிப்பர் வாகரங்களையும் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


