மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி..!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் எண்ணக்கருவில் உதித்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஒர் அங்கமாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலமாக சுகாதாரம் மற்றும் விவசாயம்சார் திணைக்களங்களின் கீழ் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களின் தரவுகளை “டயஸ் வோர்ட் ” எனும் செயலி மூலம் பதிவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தல் தொடர்பான செயலமர்வு இடம் பெற்றது.
இதன் போது விவசாயத்துடன் தொடர்பான திணைக்களங்களில் கடமையாற்றும் அதிகாரிகள் பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ஜகன்நாத், மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர் இப்றாகிம் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


