மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. “சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 23.06.2025ம் திகதி தொடக்கம் 27.06.2025ம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ்.குணராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..!

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

 

“சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 23.06.2025ம் திகதி தொடக்கம் 27.06.2025ம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

இந் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இடம்பெறுகிறது.

 

நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

 

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ்.குணராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin