ஊர்காவற்துறை தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. 13 உறுப்பினர்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில்,
1) EPDP 4 உறுப்பினர்கள்
2) காங்கிரஸ் 4 உறுப்பினர்கள்
3) NPP 3 உறுப்பினர்கள்
4) தமிழரசு 2 உறுப்பினர்கள்
இந்த நிலையில் நேற்றைய தினம் வரையிலும் தமிழரசுக்கட்சியின் பதில் தலைமைகளால் EPDP ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழரசின் இரு உறுப்பினர்களுக்கும் மிரட்டல் பாங்கில் அச்சுறுத்தல் வழங்கப்பட்டது. (ஓடியே ஆதாரம் உள்ளது)
ஆனால் இந்த மிரட்டலுக்கு பணிய முடியாது என்று தமிழரசின் இரு உறுப்பினர்களில் ஒருவரான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் தளபதியான ரஞ்சித் உறுதியாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று காலை தமிழரசின் மற்ற உறுப்பினரான யுகன் என்பவரை EPDP தவிசாளராக முன்மொழியும் அதன்படி இணைந்து ஆட்சியமைப்போம் என்று தமிழரசின் பதில் தலமை தரப்புக்களால் கூறப்பட்டது,
அதற்கு தமிழரசின் மற்ற உறுப்பினரான முன்னாள் தளபதி ரஞ்சித் “நான் இந்த EPDP என்ற தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்த இனத்துரோகிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவன், என்னால் இனத்துரோகிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது நீங்கள் என்னை கட்சியில் இருந்து நீக்குவது என்றால் நீக்குங்கள்” என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் காலை தவிசாளர் தெரிவு நடைபெற்றது, தமிழரசு உறுப்பினர் யுகனை EPDP முன்மொழிந்து வழிமொழிந்தது, அன்னராசாவை காங்கிரஸ் உறுப்பினர்களே முன்மொழிந்து வழிமொழிந்தார்கள்.
வாக்கெடுப்பில் யுகனிற்கு EPDP இன் 4 வாக்குகளுடன் 5 வாக்குகளும், அன்னராசாவிற்கு தமழரசின் ரஞ்சித்தின் ஒரு வாக்குடன் 5 வாக்குகளும் கிடைத்து. இருவருக்கும் சமம் என்பதால் “டொஸ்” முறைக்கு சென்றது. டொஸ் இல் அன்னராசா வெற்றிபெற்றார்.
பின் நடந்த உபதவிசாளர் தெரிவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழரசின் ரஞ்சித்தை முன்மொழிந்தார்கள். அவர் வெற்றிபெற்றார்.
இதன்படி 37 வருடங்களின் பின் இனத்துரோக EPDP இன் ஆதரவோ கூட்டோ இல்லாமல் தமிழ்த்தேசிய கட்சிகளின் கைகளில் ஊர்காவற்துறை பிரதேச சபை கிடைத்திருக்கிறது.
பதவிக்காக இனமானத்தை இனத்துரோகிகளிடம் விட்டுக்கொடுக்க முடியாது! EPDP இடம் மன்டியிட்டவர்களை தமிழ்தேசிய ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
இந்த பதிவிற்கு கீழே வந்து கதறப்போபவர்களை பார்த்தால் அவர்களின் தமிழ்த்தேசிய நீக்க நிகழ்ச்சிநிரல் நன்றாக புரியும்.

