வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

26 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும்

தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஆகியன தலா 2 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

தவிசாளர் பதவிக்காக

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில்

போட்டியிட்ட சண்முகநாதன் ஜெயந்தன் 15 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமார் 7 வாக்குகளையும் பெற்றனர்.

உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கந்தையா இலங்கேஸ்வரன் தெரிவானார்.

Recommended For You

About the Author: admin