கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..!
கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (19.06.2025) காலை 09.00 மணிக்கு அந் நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீலானி திசேர, யாழ்ப்பாணத்தின் பணிப்பாளர் அருட்தந்தை அன்றோ டெனிசியஸ் மற்றும் குழுவினர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களும் உடனிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் கரித்தாஸ் – கீயூடெக் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தி வரும் செற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாக விவசாயம் சார்ந்த செயற்றிட்டங்கள் வீட்டுத் தோட்டம், பாடசாலை தோட்டம் போன்றவற்றிக்கு வழங்கிவரும் பங்களிப்புகள் தொடர்பாக நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளரால் எடுத்துக்கூறப்பட்டது.


