மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி..!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி..!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி-2025 ற்கான வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

ஐந்து மாவட்டங்களினதும் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த போட்டி நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி இ.நளாயினி,உதவி மாவட்டச் செயலாளர் திருமதி ஹ.சத்தியஜிவிதா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்கள் .

வடமாகாண போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தினையும்,இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும்,நான்காம் இடத்தினை முல்லைத்தீவு மாவட்டமும், ஐந்தாம் இடத்தினை மன்னார் மாவட்டமும் பெற்றுக்கொண்டது.

முதலாம் இடத்தினைப்பெற்ற கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin