
மாகாண மட்டப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை அரசாங்க அதிபர் வாழ்த்தி வழியனுப்பினார்..!
மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் – மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் அப் போட்டியில் பங்குபெறும் 14 வீர வீராங்களை இன்று காலை 6.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
இதன் போது மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு தி. உமாசங்கர், பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்களான திருமதி ஆர். தர்மினி திருமதி பா. சிவதர்சினி மற்றும் திருமதி எஸ்.சுமதி உடனிருந்தார்கள்.