சிறப்புற நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுகூட்டம்..!
கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த விவசாயக்குழுக்கூட்டத்தில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கமநல அபிவிருத்தித்திணைக்கள, நீர்ப்பாசன திணைக்க, விவசாயத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்டத்தில் விவசாயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டி எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களில் ஆகாயத்தாமரை அதிக அளவில் காணப்படுவதன் காரணமாக மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் தோற்றம்பெறும் எனவும் குளத்தில் உள்ள நீரானது அதிகளவில் வெப்பமாகி வெளியேறுவதன் காரணமாகவும் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படுவதன் காரணமாகவும் மிக விரைவில் சிறிய குளங்களில் காணப்படுகின்ற ஆகாயத்தாமரையினை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தீர்மானம் எட்டப்பட்டது.
அத்துடன் இனிவரும் காலங்களில் சிறுபோக நெற்செய்கையின்போது அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்ட பகுதிகள் மாத்திரமே நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படும் எனவும் மேலதிக விதைப்பின் காரணமாக கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதனால் மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.
மேலும் சிறுபோக அறுவடை ஆரம்பமாக உள்ள நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலையினை நிர்ணயிக்கும் வகையில் உரிய தீர்வு பெற்று தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.


