மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை..!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை யௌ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அதிக வரிசை காணப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போது அவர் குறித்த விடையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எரிபொருள் விடையம் தொடர்பாக அரசாங்கமும் ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளது. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் எந்தவிதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையெனவும், மக்கள் வீணாக வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

