கனடாவில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞன் பலி

கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

Bancroft பகுதியில் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததாகவும் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கியதாக சந்தேகப்பட்டதாகவும் அவசர உதவி குழுவினர் தெரிவித்தனர்.

நீருக்கடியில் தேடிய மீட்பு பிரிவினர் சடலம் ஒன்றை கண்டுபிடித்த நிலையில், அது படகிலிருந்த மூன்றாவது இளைஞன் என்பதை உறுதிப்படுத்தினர்.

மேலும் குறித்த இளைஞன் உயிர்க்காப்பு அங்கி (life jacket) அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin